கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அருகே உள்ள போகனப்பள்ளியை சேர்ந்தவர் பிரசாத். இவரது மனைவி மீனா (வயது 26). சம்பவத்தன்று இரவு இவா் வீட்டு அருகில் நின்று இருந்தார். அப்போது அவரை பாம்பு கடித்தது. இதில் மயக்கம் அடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மீனா நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.