ஓசூர்
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பிரின்ஸ் குமார் (வயது 21). இவர் பேரிகை அருகே மீனன்தொட்டி கிராமத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். மேலும் அந்த நிறுவன வளாகத்தில் உள்ள குடியிருப்பில் அவர் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் அவர் அந்த நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அருகில் எந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்த வேறு ஒரு நபர் தவறுதலாக எந்திரத்தை இயக்கினார். இதில் எந்திரத்தில் பிரின்ஸ்குமார் சிக்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து பேரிகை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.