கர்ப்பிணி திடீர் சாவு

Update: 2023-06-13 19:30 GMT

ஓசூர்:

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் பங்காருபேட்டை அருகே உள்ள தொப்பனஅள்ளியை சேர்ந்தவர் ஹரீஷ். இவருடைய மனைவி காயத்திரி (வயது 21). இவர்களுக்கு 4 ஆண்டுகளுககு முன்பு திருமணம் நடந்தது. தற்போது காயத்திரி கர்ப்பமாக இருந்தார். இந்த நிலையில் பாகலூர் பெலத்தூர் ஜீவா நகரில் பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்த காயத்திரி நேற்று முன்தினம் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அவர் எப்படி இறந்தார்? என பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணமான 4 ஆண்டுகளில் இளம்பெண் இறந்துள்ளதால் இதுகுறித்து ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்