பாப்பாரப்பட்டி
தர்மபுரி அருகே உள்ள பழைய தர்மபுரியை சேர்ந்தவர் முத்து. இவரது மகன் நவீன்குமார் (வயது 19). இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் நண்பர்களுடன் இண்டூருக்கு சென்றார். பின்னர் அவர்கள் மீண்டும் தர்மபுரிக்கு வந்தபோது அதகபாடி துணை மின்நிலையம் அருகே பின்னால் வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் நவீன்குமார் படுகாயம் அடைந்தார். மற்ற 2 பேரும் லேசான காயம் அடைந்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் நவீன்குமாரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நவீன்குமார் இறந்தார். இந்த விபத்து குறித்து இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.