கிருஷ்ணகிரி அணை அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலி

Update: 2023-06-05 04:45 GMT

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அணை அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலியானான். அவனுடைய அண்ணன் படுகாயம் அடைந்தான்.

உழவு பணி

கிருஷ்ணகிரி அணை அருகே உள்ள குஜிலிக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 42). இவருக்கு நவீன் குமார் (12), விஷ்ணுகுமார் (7) என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று அதே பகுதியில் உள்ள சின்னத்தம்பி என்பவருடைய விவசாய நிலத்தில் டிராக்டர் மூலம் உழவு பணி நடந்தது. அப்போது நவீன்குமார், விஷ்ணுகுமார் ஆகியோர் டிராக்டரில் ஏறி அமர்ந்தனர். இதனை தொடர்ந்து அங்குள்ள வயல் வரப்பில் டிராக்டர் ஏறியபோது நிலைதடுமாறியதால் அண்ணன், தம்பி இருவரும் தவறி கீழே விழுந்தனர். அந்த சமயம் எதிர்பாராதவிதமாக டிராக்டர் சக்கரம் 2 பேரின் மீதும் ஏறி இறங்கியது.

சோகம்

இதில் படுகாயம் அடைந்த விஷ்ணுகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த நவீன்குமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி அணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்