ஓசூர்:
ஓசூர் சென்னத்தூர் அருகே சானசந்திரத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 30). ஏ.டி.எம் எந்திர சர்வீஸ் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த 20-ந் தேதி ஓசூர்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சிப்காட் ஜங்ஷன் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பார்த்திபன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.