வரட்டனப்பள்ளி அருகேகார் கவிழ்ந்து விபத்து; வெல்டிங் தொழிலாளி சாவுஉறவினர் படுகாயம்

Update: 2023-04-21 19:00 GMT

பர்கூர்:

வரட்டனப்பள்ளி அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வெல்டிங் தொழிலாளி இறந்தார். அவருடைய உறவினர் படுகாயம் அடைந்தார்.

வெல்டிங் தொழிலாளி

கந்திகுப்பம் போலீஸ் எல்லைக்குட்பட்ட காளி கோவில் பகுதியை சேர்ந்தவர் முகமது அகரம் ஷேக் (வயது 40). வெல்டிங் தொழிலாளி. இவருடைய உறவினர் நிஜாமுதீன் (30). இவர்கள் இருவரும் ஒரு காரில் கிருஷ்ணகிரிக்கு சென்று விட்டு மீண்டும் காளி கோவிலுக்கு திரும்பி வந்தனர்.

காரை நிஜாமுதீன் ஓட்டி வந்தார். அப்போது கார் ஆந்திர மாநிலம் குப்பம் செல்லும் சாலையில் உள்ள வரட்டனப்பள்ளி அருகே தாண்டவம் பள்ளம் என்ற இடத்தில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள கல்லில் மோதி கவிழ்ந்தது.

விசாரணை

இதில் இடிபாடுகளில் சிக்கி முகமது அகரம் ஷேக் சம்பவ இடத்திலேயே பலியானார். நிஜாமுதீன் பலத்த காயங்களுடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்