கத்திக்குத்தில் காயம் அடைந்தவர் ஆஸ்பத்திரியில் சாவு

மகுடஞ்சாவடி அருகே கத்திக்குத்தில் காயம் அடைந்தவர் ஆஸ்பத்திரியில் இறந்தார்.

Update: 2023-04-05 19:57 GMT

இளம்பிள்ளை

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே ஆ.தாழையூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கிருபாகரன், அஜித்குமார், பரத், வெங்கடேஷ். 4 பேரும் நண்பர்கள். இவர்கள் கடந்த 2-ந் தேதி எருமைப்பட்டிக்கு சென்று மது அருந்துவிட்டு ஆ.தாழையூர் முனியப்பன் கோவில் பகுதிக்கு வந்தனர்.அங்கு இருந்த அதேபகுதியை சேர்ந்த நவீன்குமாருக்கும், வெங்கடேசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ் தான் வைத்திருந்த கத்தியால் நவீன்குமாரின் கழுத்தில் குத்தியதாக கூறப்படுகிறது. தட்டிக்கேட்ட  அஜித்குமாருக்கும் கத்திக்குத்து விழுந்தது.

காயம் அடைந்த இருவரையும் எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே வெங்கடேஷ் கைது செய்யப்பட்டார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நவீன்குமார் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்