கிணற்றில் தவறி விழுந்து கட்டிட மேஸ்திரி சாவு

சிங்காரப்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்து கட்டிட மேஸ்திரி இறந்தார்.

Update: 2023-04-01 18:45 GMT

ஊத்தங்கரை

சிங்காரப்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்து கட்டிட மேஸ்திரி இறந்தார்.

கட்டிட மேஸ்திரி

கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை அருகே உள்ள பெரியதள்ளப்பாடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது43). கட்டிட மேஸ்திரி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து அவர் குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவர் எதிர்பாரதவிதமாக அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் சக்திவேலின் உடலை கிணற்றில் இருந்து மீட்டனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்