விபத்தில் ஜவுளி வியாபாரி இறந்தார்.

மத்தூர் அருகே மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதி ஜவுளி வியாபாரி இறந்தார்.;

Update: 2023-03-27 18:45 GMT

மத்தூர்

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள மாடரஅள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 45). ஜவுளி வியாபாரி. இவர் மொபட்டில் மத்தூர்- மாடரஅள்ளி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிள் மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் படு காயமடைந்த கிருஷ்ணமூர்த்தியை அருகில் இருந்தவர்கள் மீட்டு மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கிருஷ்ணமூர்த்தி இறந்து விட்டது தெரியவந்தது. இது குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்