தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு
காவேரிப்பட்டணம் அருகே தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி இறந்தார்.
காவேரிப்பட்டணம் அருகே உள்ள மாட்டுக்கொல்ல கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன் (வயது 40). தொழிலாளி. இவர் மில்மேடு அருகே உள்ள காந்தி என்பவர் வீட்டில் தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க ஏறி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி மாதம்மாள் கொடுத்த புகாரின் பேரில் காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.