மோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி சாவு
கல்லாவி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் விவசாயி இறந்தார்.
ஊத்தங்கரை, ஜன.19-
கல்லாவி அருகே உள்ள மேட்டுத்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 45). விவசாயி. இவர் கடந்த 16-ந் தேதி மோட்டர்சைக்கிளில் கோழிநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிள் விஜயகுமார் ஓட்டி சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் விஜயகுமார் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்றொரு நபர் லேசான காயம் அடைந்தார். விபத்து குறித்து கல்லாவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.