மொபட் மோதி மூதாட்டி சாவு
கிருஷ்ணகிரி அருகே மொபட் மோதி மூதாட்டி இறந்தார்.
குருபரப்பள்ளி
கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுமருதி அருகே உள்ள சாதனப்பள்ளியை சேர்ந்தவர் மங்கம்மாள் (வயது 60). இவர் கடந்த 15-ந் தேதி சீலேப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகில் நடந்து சென்றார். அப்போது பின்னால் வந்த மொபட் மூதாட்டி மீது மோதியது. இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்து இறந்தார். விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.