மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி தொழிலாளி பலி

ராயக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி தொழிலாளி இறந்தார்.

Update: 2023-01-09 18:45 GMT

ராயக்கோட்டை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பொப்பிடி கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவருடைய மகன் அன்பு (வயது 24). தொழிலாளி. இவர் நேற்று மாலை பெங்களூருவில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டு இருந்தார். ராயக்கோட்டை அருகே ஒடையாண்டஅள்ளி பகுதியில் சென்ற போது தர்மபுரியில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அன்பு சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அவரது மனைவி ஸ்ரீதேவி மற்றும் குடும்பத்தினர் விரைந்து சென்று உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த விபத்து குறித்து ஸ்ரீதேவி ராயக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று அன்புவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்