மோட்டார்சைக்கிள் கவிழ்ந்து தொழிலாளி சாவு
கிருஷ்ணகிரி அருகே மோட்டார்சைக்கிள் கவிழ்ந்து தொழிலாளி இறந்தார்.
பர்கூர் தாலுகா ஒண்டியூரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 45). தொழிலாளி. இவர் கிருஷ்ணகிரி பாரீஸ் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று இவர் சென்னை-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் கீழே விழுந்த ஆறுமுகம் படுகாயமடைந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.