விடுதி பெண் காப்பாளர் சாவு

பர்கூர் அருகே பணிமுடிந்து வீடு திரும்பியபோது கார் மோதி அரசு கல்லூரி மாணவிகள் விடுதி பெண் காப்பாளர் இறந்தார்.

Update: 2023-01-02 18:45 GMT

பர்கூர்

பர்கூர் அருகே பணிமுடிந்து வீடு திரும்பியபோது கார் மோதி அரசு கல்லூரி மாணவிகள் விடுதி பெண் காப்பாளர் இறந்தார்.

பெண் காப்பாளர்

கிருஷ்ணகிரி ராஜாஜி நகரை சேர்ந்தவர் சிதம்பரம். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார் இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி (வயது 56). இவர் பர்கூர் அருகே உள்ள அங்கிநாயக்கனப்பள்ளி கிராமத்தில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் விடுதியில் இரவு காப்பாளராக வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று காலை தமிழ்ச்செல்வி பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக அங்கிநாயக்கனப்பள்ளி பஸ் நிறுத்தத்திற்கு சென்றார். அப்போது அவர் அங்குள்ள சாலையை கடக்க முயன்றபோது சென்னையில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த கார் தமிழ்செல்வி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த தமிழ்ச்செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இந்த விபத்து குறித்து பர்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணி முடிந்து விடுதி காப்பாளர் வீடு திரும்பியபோது கார் மோதி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்