மது குடித்து விட்டு விடுதியில் தங்கிய டிரைவர் சாவு

ஓசூரில் மது குடித்து விட்டு விடுதியில் தங்கிய டிரைவர் இறந்தார்.

Update: 2022-12-24 18:45 GMT

ஓசூர்

ஓசூர் தாலுகா மத்திகிரி அருகே உள்ள இடையநல்லூரை சேர்ந்தவர் ஆனந்தநாயக் (வயது 22). டிரைவர். சம்பவத்தன்று இவர் நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்தார். பின்னர் அவர் தனது நண்பர்களுடன் ஓசூரில் பழைய பெங்களூரு சாலையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி தூங்கினார். மறுநாள் காலை அவரை நண்பர்கள் எழுப்பிய போது எழுந்திருக்கவில்லை.

இதைத் தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த ஆனந்த நாயக் இறந்து விட்டது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்