அச்சக உரிமையாளர் உள்பட 2 பேர் சாவு

கிருஷ்ணகிரி, ஓசூரில் நடந்த விபத்துகளில் அச்சக உரிமையாளர் உள்பட 2 பேர் இறந்தனர்.

Update: 2022-12-16 18:45 GMT

கிருஷ்ணகிரி, ஓசூரில் நடந்த விபத்துகளில் அச்சக உரிமையாளர் உள்பட 2 பேர் இறந்தனர்.

அச்சக உரிமையாளர்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள சந்தூரை சேர்ந்தவர் கமலநாதன் (வயது 46). அச்சக உரிமையாளர். இவர் நேற்று முன்தினம் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ஆலமரத்தடி பஸ்நிறுத்தம் அருகே சென்ற போது எதிரில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கமலநாதன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கார் மோதியது

ஓசூர் பழைய ஏ.எஸ்.டி.சி. அட்கோவை சேர்ந்தவர் கவிதா (37). இவர் தனது தாயார் லோகம்மாளுடன் ஸ்கூட்டரில் மூக்கண்டப்பள்ளி அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற கார் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கவிதா சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது தாயார் லோகம்மாள் படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஓசூர் சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கவிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்