வாகனம் மோதி தொழிலாளி சாவு

உத்தனப்பள்ளி அருகே வாகனம் மோதி தொழிலாளி இறந்தார்.

Update: 2022-12-11 18:45 GMT

ராயக்கோட்டை

உத்தனப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடாஜலபதி (வயது 50). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவர் உத்தனப்பள்ளி-கெலமங்கலம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த வெங்கடாஜலபதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்