டிரைவர்கள் உள்பட 3 பேர் சாவு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் டிரைவர்கள் உள்பட 3 பேர் இறந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் டிரைவர்கள் உள்பட 3 பேர் இறந்தனர்.
டிரைவர்கள்
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த மேலபுனவாசலை சேர்ந்தவர் அன்புச்செல்வம் (வயது 39). டிரைவர். இவர் நேற்று முன்தினம் நள்ளிரவில் வேட்டியம்பட்டியில் சாலையோரம் நடந்து சென்றார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிங்காரப்பேட்டை அருகே உள்ள கொட்டுகாரம்பட்டியை சேர்ந்தவர் தாமோதரன் (35). லாரி டிரைவர். இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் சிங்காரப்பேட்டை வாரச்சந்தைக்கு அருகில் சென்றார். அப்போது அவர் நிலைத்தடுமாறி கீழே விழுந்தது சம்பவ இடத்தில் இறந்தார். இந்த விபத்து குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர்
பெங்களூரு கங்ககொண்டனஅள்ளியை சேர்ந்தவர் அப்துல் சாதிக் (23). இவர் அங்கு காலணி கடை வைத்து இருந்தார். இவர் நேற்று முன்தினம் சூளகிரி பவர்கிரீடு அருகில் ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர், சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அப்துல் சாதிக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.