வாகனத்தில் தவறி விழுந்தவர் சாவு

வாகனத்தில் தவறி விழுந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-11-26 17:16 GMT

சத்திரக்குடி, 

பரமக்குடி தாலுகா போகலூர் ஒன்றியம் சத்திரக்குடி அருகே உள்ள எஸ்.வி. புரம் பகுதியை சேர்ந்தவர் ஜான் கென்னடி (வயது50).இவரும் அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பரான ராமரும் மது அருந்திவிட்டு சேமனூர் ரோட்டில் ஒருவருக்கொருவர் ஜாலியாக கிண்டல் பேசி விளையாடி வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ராமர் தள்ளிவிட்டதில் அந்த வழியாக வந்த நெல் கருது அடிக்கும் வண்டியின் மீது கென்னடி விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பயனின்றி பரிதாபமாக இறந்து விட்டார். இது குறித்தபுகாரின் பேரில் சத்திரக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்