மினி லாரி மோதி தொழிலாளி சாவு
ஓசூர் அருகே வீட்டு முன்பு தூங்கியபோது மினி லாரி மோதி தொழிலாளி இறந்தார்.;
ஓசூர்
ஓசூர் அருகே நாயனகொண்ட அக்ரஹாரம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது36). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவர் மது அருந்தி விட்டு போதையில், வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் போதையில் வீட்டு முன்பே படுத்து தூங்கினார். அப்போது, அந்த வழியாக வந்த மினி லாரி ஒன்று, கிருஷ்ணன் மீது மோதியது. இந்த விபத்தில் கிருஷ்ணன்சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, ஓசூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று கிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.