மாயமான மதுரை வாலிபர் உடல் கரை ஒதுங்கியது

மாயமான மதுரை வாலிபர் உடல் கரை ஒதுங்கியது

Update: 2022-11-21 17:25 GMT

உச்சிப்புளி, 

மதுரையிலிருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு வர்ஷன், விக்னேஷ் ஆகிய 2 பேரும் நண்பர்களுடன் உச்சிப்புளி அரியமான் கடற்கரை வந்துள்ளனர். இவர்கள் கடலில் இறங்கி குளித்துள்ளனர்.அப்போது கடல் அலையில் சிக்கி மதுரையை சேர்ந்த வர்ஷன் உயிரிழந்தார். உயிரிழந்த வர்ஷனின் உடல் கரை ஒதுங்கியது. இதனிடையே மற்றொரு வாலிபர் விக்னேஷ் கடலில் மூழ்கிய நிலையில் அவரது கதி என்னவென்று தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் மதுரை அனுப்பானடி பகுதியை சேர்ந்த விக்னேஷ் உடல் நேற்று அழுகிய நிலையில் கரை ஒதுங்கியது. இது குறித்து தகவல் அறிந்து கடலோர போலீசார் அந்த உடலை கைப்பற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பிேரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து அதன் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்