கண்மாயில் மூழ்கி வாலிபர் பலி

கண்மாயில் மூழ்கி வாலிபர் பலியானார்.

Update: 2022-11-21 17:21 GMT

தொண்டி, 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சேர்வார் ஊருணியை சேர்ந்த கண்ணன் என்பவர் மகன் ராஜா (வயது 23). இவர் அதே ஊரை சேர்ந்த சிலருடன் திருவாடனை அருகே உள்ள கிழவண்டி கிராமத்தில் உள்ள கண்மாயில் தூண்டில் மூலம் மீன் பிடித்துக்கொண்டு இருந்தாராம். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த திருவாடானை போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி திருவாடானை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருவாடானை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்