தென்பெண்ணை ஆற்றில் தவறி விழுந்து விவசாயி சாவு

சூளகிரி அருகே தென்பெண்ணை ஆற்றில் தவறி விழுந்து விவசாயி இறந்தார்.

Update: 2022-11-16 18:45 GMT

சூளகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே மேடுபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ராமப்பா (வயது65). விவசாயி. சம்பவத்தன்று இவர், கோபசந்திரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் ஆற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று வெங்கட்ராமப்பாவின் உடலை ஆற்றில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்