வாலிபர் சாவு

கந்திகுப்பம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் இறந்தார்.

Update: 2022-11-14 18:45 GMT

பர்கூர்

கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார் (வயது 22) கல் உடைக்கும் தொழிலாளி. இவர் பர்கூரில் உறவினரை பார்த்துவிட்டு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். கந்திகுப்பம் அருகே உள்ள சுண்டம்பட்டி பகுதியில் சென்றபோது முன்னால் சென்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் கீழே விழுந்த பிரவீன்குமார் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கந்திகுப்பம் போலீசார் விரைந்து சென்று பிரவீன்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்