ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகே உள்ளது பிள்ளைமடம். இந்த ஊரை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் இளங்கோ (வயது27). இவர் தண்ணீர் வண்டியில் வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்து வந்தார். இவ்வாறு நேற்று பிற்பகலில் ராமநாதபுரம் அருகே பால்க்கரை பகுதியில் வண்டியில் உள்ள மோட்டார் மூலம் தண்ணீரை விநியோகம் செய்ய முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டாரில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு இளங்கோ மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்ட இளங்கோ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து ராமநாதபுரம் நகர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.