மதுபோதையில் தவறி விழுந்த தொழிலாளி சாவு

பாலக்கோடு அருகே மதுபோதையில் தவறி விழுந்த தொழிலாளி இறந்தார்.

Update: 2022-10-31 18:45 GMT

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே தண்டுகாரண அள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது28). இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் தமிழ்ச்செல்வன் மது போதையில் வீட்டு படிக்கட்டில் இறங்கினார். அப்போது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் படுகாயம் அடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது தமிழ்ச்செல்வன் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்