தவறிவிழுந்து தொழிலாளி சாவு

தவறிவிழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-10-25 18:14 GMT


ராமநாதபுரம் காட்டுப்பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த வடிவேல் மகன் முருகானந்தம் (வயது45). கட்டிட வேலை பார்த்து வந்தார். இவர் பட்டணம்காத்தான் பகுதியில் வேலையை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். ராமநாதபுரம் டி.பிளாக் பஸ் நிறுத்தம் பகுதியில் வந்தபோது திடீரென்று வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். படுகாயமடைந்த முருகானந்தம் உடனடியாக மீட்கப்பட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு முதல் உதவி சிகிச்சைக்கு பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். இதுகுறித்து அவரின் மனைவி சாந்தி அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்