தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி டிரைவர் சாவு

சிங்காரப்பேட்டை அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-10-21 18:45 GMT

ஊத்தங்கரை:

சிங்காரப்பேட்டை அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

டிரைவர்

ஊத்தங்கரை தாலுகா அனுமந்தீர்த்தம் அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 32). லாரி டிரைவர். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் நேற்று முன்தினம் நல்லவம்பட்டி பகுதியில் சந்திராபுரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் குளிக்க சென்றார்.

அப்போது அவர் திடீரென தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதில் ராமமூர்த்தி ஆற்று தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

உடல் மீட்பு

தென்பெண்ணை ஆற்றில் அதிக அளவில் சென்றதால் போலீசார் இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று ராமமூர்த்தியை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு அவரது உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

இதையடுத்து போலீசார், ராமமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்