தனியார் நிறுவன மாடியில் இருந்து தவறி விழுந்த ஊழியர் சாவு

ஓசூரில் தனியார் நிறுவன மாடியில் இருந்து தவறி விழுந்த ஊழியர் இறந்தார்.

Update: 2022-10-17 18:45 GMT

ஓசூர்:

திருப்பத்தூர் மாவட்டம் நாட்ராம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பரத் (வயது 52). இவர் ஓசூரில் பத்தலப்பள்ளி பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் அவர் வேலை செய்த நிறுவனத்தில் 3-வது மாடியில் கண்ணாடி பதிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தவறி கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஓசூர் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்