மத்தூர்:
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 44). 7-வது பட்டாலியன் போலீசாக இருந்த இவர் போச்சம்பள்ளியில் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார். இவருக்கு வலிப்பு நோய் இருந்தது. இதற்காக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. கடந்த 13-ந் தேதி பணி முடிந்து வீட்டிற்கு வந்த அவர் மறுநாள் காலை பணிக்கு செல்லவில்லை. இதனால் சக போலீசார் சென்று பார்த்த போது வீட்டின் முன்பு தலையில் காயத்துடன் சுரேஷ் மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.