கண்மாயில் மூழ்கி மாற்றுத்திறனாளி சாவு

கண்மாயில் மூழ்கி மாற்றுத்திறனாளி உயிரிழந்தார்.

Update: 2022-10-01 18:45 GMT

திருப்புவனம், 

திருப்பாச்சேத்தியை சேர்ந்தவர் காளீஸ்வரன் (வயது 36). மாற்றுத்திறனாளியான இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்றவர் திரும்பி வரவில்லை. அவரை பெற்றோர் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நேற்று திருப்பாச்சேத்தியில் உள்ள பெரிய கண்மாயில் மூழ்கி காளீஸ்வரன் இறந்து கிடந்தார். இதுகுறித்து அறிந்த திருப்பாச்சேத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் அங்கு காளீஸ்வரனின் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்