லாரி மோதி படுகாயம் அடைந்த தொழிலாளி சாவு
தொப்பூர் கணவாயில் லாரி மோதி படுகாயம் அடைந்த தொழிலாளி இறந்தார்.
நல்லம்பள்ளி:
ஏரியூர் பகுதியை சேர்ந்தவர் ரத்தினம் (வயது 55). ஜருகு கருப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தன் (40). தொழிலாளிகள். இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் தொப்பூர் கணவாய் போலீஸ் குடியிருப்பு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் ரத்தினம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோவிந்தன் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அதிகாலை கோவிந்தன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.