பரமக்குடி,
பரமக்குடி அருகே உள்ள சூடியூர் தண்டவாளத்தில் இறந்த நிலையில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக மானாமதுரை ெரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்தவரின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் இருந்த பையை போலீசார் சோதனை செய்த போது அவர் உத்தர பிரதேசத்தை சேர்ந்த உம்மன் (வயது23) என்றும், அவர் மானாமதுரை அருகே உள்ள கீழப்பசலையில் இருந்து தண்டவாளத்தில் நடந்து சென்ற போது திருச்சியில் இருந்து ராமேசுவரம் நோக்கி சென்ற ெரயில் மோதி பலியானார் என்பதும் தெரிய வந்தது. உடனே அவரது உடலை ெரயில்வே போலீசார் கைப்பற்றி பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ெரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.