தனுஷ்கோடி கடற்கரையில் ஆண், பெண் பிணம்
தனுஷ்கோடி கடற்கரையில் ஆண், பெண் உடல் கரைஒதுங்கி கிடந்தது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி எம்.ஆர்.சத்திரம் கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கரை ஒதுங்கி கிடந்தது. கம்பிப்பாடு கடற் கரையில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் உடல் அழுகிய நிலையில் ஒதுங்கியுள்ளது. இந்த உடல்களை கைப்பற்றி ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரி சோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது குறித்து ராமேசுவரம் கடலோர காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் தலைமையில் கடலோர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.