பாம்பு கடித்து முதியவர் பலி

பாம்பு கடித்து முதியவர் பலியானார்.

Update: 2022-09-05 17:18 GMT

முதுகுளத்தூர், 

முதுகுளத்தூர் அருகே உள்ள இளங்காக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 57). இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பாம்பு அவரைக் கடித்தது.இதை அறிந்த உறவினர்கள் அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த தேரிருவேலி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்