2 மோட்டார்சைக்கிள்கள் மோதல்; தையல் தொழிலாளி பலி

Update: 2022-09-02 13:17 GMT


திருப்பூர் விஜயபுரம் காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த கிட்டுசாமி என்பவரின் மகன் செல்வராஜ் (வயது 35). பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் பெருந்தொழுவில் இருந்து கோவில் வழிக்கு மோட்டார் சைக்கிளில் மனைவி மற்றும் மகளுடன் வந்து கொண்டிருந்தார். அங்குள்ள தனியார் பள்ளி அருகே வந்த போது எதிரே கோவில்வழியில் இருந்து அமராவதி பாளையம் நோக்கி திருப்பூர் பேரையூர் சின்னகாட்டுபாளையம் பகுதியை சேர்ந்த ஜெயசூர்யா (20) மற்றும் அவரது நண்பர் பரணி ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் 2 மோட்டார் சைக்கிள்களும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் செல்வராஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருப்பவர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராஜ் உயிரிழந்தார். இது குறித்து நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்