14 வயது சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை இறந்தது

14 வயது சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை இறந்தது

Update: 2022-08-21 18:21 GMT

உசிலம்பட்டி, 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது போலக்காபட்டி. இந்த ஊரைச்சேர்ந்தவர் பெரியகருப்பன். இவருடைய மகன் உதயக்குமார் (வயது 28). இவர் தேனியை சேர்ந்த 14 வயது சிறுமியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ந் தேதி திருமணம் செய்துள்ளார்.

இந்த நிலையில் குழந்தை திருமணம் என்பதை மறைத்து போலக்காபட்டியில் உள்ள தோட்டத்து வீட்டில் சிறுமியுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் 7 மாத கர்ப்பிணியான 14 வயது சிறுமிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. அவருக்கு போலக்காபட்டியில் உள்ள உதயக்குமார் வீட்டிலேயே ஆண் குழந்தை பிறந்து சற்று நேரத்தில் இறந்து விட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் உயிரிழந்த குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை திருமணம் செய்து வைத்தது தொடர்பாகவும், 14 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கியது தொடர்பாகவும் உதயக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்