ரெயிலில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி சாவு

மொரப்பூர் அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி இறந்தார்.

Update: 2022-08-16 17:24 GMT

மொரப்பூர்:

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள தொட்டம்பட்டி- தாசம்பட்டி ரெயில் நிலையத்திற்கும் இடையே தண்டவாளத்தில் பெண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மொரப்பூர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் கேரள மாநிலத்தை சேர்ந்த சாரம்மா (வயது 79) என்பதும், இவர் தனது மகன்கள் மற்றும் மருமகளுடன் பெங்களூருவில் இருந்து கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் கோவைக்கு சென்ற போது ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்து இறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ரெயில்வே போலீசார் அந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்