மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி பாத்திர வியாபாரி சாவு
பாலக்கோடு அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி பாத்திர வியாபாரி இறந்தார்.
பாலக்கோடு:
பாலக்கோடு அருகே பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது60). பாத்திர வியாபாரி. இவர் நேற்று முன்தினம் இரவு காரிமங்கலம் சென்று விட்டு ராயக்கோட்டை பதஞ்சலி பகுதியை சேர்ந்த உறவினர்கள் சுரேஷ் (29), பூபதி (26) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் பாலக்கோடு நோக்கி வந்து கொண்டு இருந்தார். மோட்டார் சைக்கிளை சுரேஷ் ஓட்டி வர மற்ற 2 பேரும் பின்னால் அமர்ந்து வந்தனர். பாலக்கோடு பை-பாஸ் ரோட்டில் வந்்த போது பின்னால் வந்த சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது, இதில் முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 2 பேரும் காயம் அடைந்து பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.