பஸ் மோதி கட்டிட மேஸ்திரி பலி

தர்மபுரி அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி கட்டிட மேஸ்திரி பலியானார்.

Update: 2022-08-12 17:31 GMT

தர்மபுரி மாவட்டம் அல்லியூர் பகுதியை சேர்ந்தவர் மாதையன் (வயது 45). கட்டிட மேஸ்திரி. இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகன்கள் உள்ளனர். மாதையன் தர்மபுரி- பாலக்கோடு சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த மாதையனை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இந்த விபத்து குறித்து மதிகோன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்