விபத்தில் தனியார் நிறுவன ஊழியா் சாவு

பாலக்கோடு அருகே விபத்தில் தனியார் நிறுவன ஊழியா் இறந்தார்.;

Update: 2022-07-26 17:04 GMT

பாலக்கோடு:

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே முதலிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசு (வயது 34). இவர் ஓசூர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சிந்துமதி. அன்பரசு நேற்று முன்தினம் அனுமந்தபுரத்தில் இருந்து கரகூர் கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். பாலக்கோடு சுகர்மில் கூட்ரோடு அருகே சென்ற போது நாய் ஒன்று குறுக்கே வந்தது. அப்போது மோட்டார் சைக்கிள் நாய் மீது மோதியது. இதில் கீழே விழுந்து அன்பரசு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்