மாடியில் இருந்து விழுந்து பெயிண்டர் பலி

கிருஷ்ணகிரியில் மாடியில் இருந்து விழுந்து பெயிண்டர் பலியானார்.;

Update: 2022-07-24 17:22 GMT

கிருஷ்ணகிரி:

வேலூர் பசுருல்லா தெருவை சேர்ந்தவர் அமானுல்லா (வயது 38). பெயிண்டர். இவர் கிருஷ்ணகிரியில் தங்கி வேலை செய்து வந்தார். கடந்த 22-ந் தேதி அவர் சென்னை சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பெயிண்டிங் வேலையில் இருந்தார். அப்போது அவர் முதல் தள மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அமானுல்லா இறந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்