மோட்டார் சைக்கிள்கள் மோதல்; முதியவர் பலி
மோட்டார் சைக்கிள்கள் மோதி முதியவர் பலியானார்.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே உள்ள கே.ஆர் பட்டினத்தை சேர்ந்தவர் அழகர் (வயது 65). இவர் மோட்டார் சைக்கிளில் பரமக்குடிக்கு பொருட்கள் வாங்கிவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சாம்பக்குளம் விலக்கு ரோட்டில் எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியது. இதில் அழகர் படுகாயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து கீழத்தூவல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.