லாரி மோதி தொழிலாளி சாவு

தர்மபுரி அருகே லாரி மோதி தொழிலாளி இறந்தார்.;

Update: 2022-07-11 15:29 GMT

தர்மபுரி அடுத்த பழைய தர்மபுரி பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 65). தொழிலாளி. இவர் அந்த பகுதியில் உள்ள டீக்கடையில் டீ குடித்துவிட்டு சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது பின்னோக்கி வந்த ஒரு லாரி அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த லோகநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த நிலையில் விபத்துக்கு காரணமான லாரியின் டிரைவர் அங்கிருந்து ஓடிவிட்டார். இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லோகநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்