மோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி சாவு

மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் விவசாயி இறந்தார்.;

Update: 2022-07-10 16:06 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் ராஜா (வயது 50). விவசாயி. சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் கவுண்டம்பட்டி-தோலனூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், ராஜாவின் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இந்த விபத்தில் படு காயமடைந்த ராஜா தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கோவையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து ஏ.பள்ளிப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்