விபத்தில் தொழிலாளி சாவு; 2 பேர் படுகாயம்

தேன்கனிக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி இறந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-07-04 16:43 GMT

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி இறந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

தொழிலாளர்கள்

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தருதிம்மனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடராமப்பா (வயது 45). அதே பகுதியை சேர்ந்தவர்கள் புட்டப்பா(41), நரசிம்மப்பா (44), கூலித்தொழிலாளர்கள். இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் தளி நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.

கிறிஸ்துபாளையம் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட வெங்கடராமப்பா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். புட்டப்பா, நரசிம்மப்பா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

விசாரணை

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை போலீசார் விரைந்து சென்று இறந்த வெங்கடராமப்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்