தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுமி சாவு

தோழிகளுடன் விளையாடிய போது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுமி சாவு

Update: 2022-07-01 15:47 GMT

ஓசூர்:

தர்மபுரி மாவட்டம் பழைய தர்மபுரி பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார். கட்டிட மேஸ்திரி. இவர் ஓசூர் அருகே சின்ன எலசகிரி கெம்பேகவுடா நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் குணஸ்ரீ (வயது 8). சின்ன எலசகிரி அரசு தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில், சிறுமி குணஸ்ரீ தனது தோழிகளுடன் விளையாடிய போது, எதிர்பாராதவிதமாக அந்த பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தாள். இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்