லாரி சக்கரத்தில் சிக்கி டிரைவர் சாவு

பாப்பிரெட்டிப்பட்டி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி டிரைவர் இறந்தார்.

Update: 2022-06-26 16:42 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

சேலம் மாவட்டம் மணியனூரை சேர்ந்தவர் பாபு (வயது 46). நெத்திமேடு மணியனூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜா (58). டிரைவர்களான இவர்கள் 2 பேரும் நண்பர்கள். இவர்கள் ஆம்பூரில் இருந்து லாரியில் சேலம் ேநாக்கி வந்து கொண்டு இருந்தனர். லாரியை ராஜா ஓட்டி வந்தார். பாப்பிரெட்டிப்பட்டி அருகே மஞ்சவாடி கணவாய் வெள்ளையப்பன் கோவில் இறக்கத்தில் லாரி, வந்தபோது சேலத்தில் இருந்து அரூர் நோக்கி வந்த கன்டெய்னர் லாரி ராஜா ஓட்டி வந்த லாரியின் மீது மோதியது. இதில் ராஜா படுகாயம் அடைந்தார். இதனால் அவர் லாரியை நிறுத்த முயன்ற போது பிரேக் பிடிக்காமல் கட்டுபாட்டை இழந்து வேகமாக சென்றது. அப்போது லாரியின் கதவு திடீரென திறந்தது. இதை மூட பாபு முயன்றபோது கீழே தவறி விழுந்து லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்